கொழும்பில் ஹோட்டல்களை திறப்பதற்கு அனுமதி..!
சுற்றுலாத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்களுக்கும் உணவகங்களுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கொழும்பு மாநாகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் கொழும்புக்குள் சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
ஹோட்டல் மற்றும் உணவகங்கள் மீண்டும் தொடங்கியவுடன் சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கின்றனரா என்பதை ஆய்வு செய்வதற்கு ஆறு குழுக்கள் நியமிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை