அரிசிக்கென வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை தொடர்ந்தும் செல்லுபடியாகும்
அரிசிக்கென வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்ந்தும் செல்லுபடியாகுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நிர்ணய விலையை விடவும் அதிக விலைக் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறான வர்த்தகர்களை கண்டறியும் வகையும் சுற்றி வளைப்புக்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாவளையாளர் அலுவல்கள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அரிசிக்கான நிர்ணய விலை குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சில அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் போலி பிரச்சாரங்களை பரப்புகின்றனர் என்றும் அதில் எந்தவொரு உண்மையும் இல்லையென்றும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை