நாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் – சந்திம வீரக்கொடி
நாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
“நூற்றுக்கு 4.5 ஆக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 2 வீதத்திற்கு குறைத்து விட்டதோடு மட்டுமல்லாமல், நாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள்.
அத்தோடு, தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்று, நாட்டையே பாதாளத்திற்குள் தள்ளினார்கள். நாட்டுக்குள் எந்தவொரு உற்பத்தியையும் மேற்கொள்ளாமல், அனைத்தையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் ஒரு மனநிலையில்தான் கடந்த ஆட்சியாளர்கள் காணப்பட்டார்கள்.
இப்படியானவர்கள் இன்று எம்மீது குற்றம் சுமத்துகிறார்கள். இந்த நெருக்கடியான நிலையிலும் நாம் 5 ஆயிரம் ரூபாயை மக்களுக்கு வழங்க பின்நிற்கவில்லை. இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியானது, மேலும் மேலும் பொய்யான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
தங்கள் கட்சிப் பிளவை மூடிமறைக்க, மக்களை குழப்பும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். இப்படியான செயற்பாட்டை உடனடியாக இவர்கள் கைவிட வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை