இதுவரை நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 50,000 ஐ தாண்டியது
கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து இலங்கையில் இதுவரை நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 50,000 ஐ தாண்டியுள்ளது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
அவற்றில் 16 ஆயிரத்து 59 சோதனைகள் பெறளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் 6,096 சோதனைகள் ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவ பீடத்தாலும் 5,798 சோதனைகள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
மேலும் கராபிட்டி போதனா வைத்தியசாலையால் 4,765 சோதனைகளும் கண்டி பொது வைத்தியசாலையில் 3,640 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் ஒருநாளைக்கு 3,000 பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றாலும், ஒரு நாளைக்கு 6,000 சோதனைகள் வரை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை