குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒரு வர் மரணம் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

ஹட்டன் பொலிஸ் பிரிவுகுட்பட்ட  டிக்கோயா பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் தொழிலாளி பரிதாபமான நிலையில்    உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இச்சம்பவம் 25 இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது தேயிலை மலையில் கொழுந்து பரித்துகொண்டிருந்த போது அப்பகுதியில் உள்ள மரத்தில் இருந்த குளவிகள் கலைந்து கொட்டியுள்ளது காயமடைந்த தொழிலாளர்கள்  உடனடியாக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கபட்டனர் இதில் கடும் பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் சிகிச்சை  பயன இன்றி இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு இறந்தவர் டிக்கோயா டன்பார் தோட்டத்தினை சேர்ந்தவர்    என தெரியவந்துள்ளது இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.