கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

கொழும்பு பங்குச் சந்தை நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ரேணுக விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமுலாகும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகளை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.