வவுனியாவில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயம், வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய கொவிட்19 சுகாதாரத்தை மேம்படுத்தல் பணியின் நான்காம் கட்ட பணிகள் இன்று (திங்கட்கிழமை) வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது வடக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சு.அமிர்தலிங்கம் மற்றும் உத்தியோகத்தர்கள், வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசன், வவுனியா மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் கெனடி ஆகியோரது மேற்பார்வையின் கீழ் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.