முடக்கநிலையின் போது தூய்மையான காற்றைப் பராமரிக்க பெரும்பாலான பிரித்தானிய சாரதிகள் தயார்!
முடக்கநிலையின் போது தூய்மையான காற்றைப் பராமரிக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பிரித்தானிய சாரதிகள், தங்கள் நடத்தையை மாற்றத் தயாராக உள்ளதாக கணக்கொடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
Automobile Association நடத்திய வாக்கெடுப்பில் வாக்களித்த 20,000 வாகன சாரதிகளில் பாதிக்கும் அதிகமானோர் தூய்மையான காற்றைப் பராமரிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். 40 சதவீதத்துக்கு குறைவான வாகன சாரதிகள், வாகனம் ஓட்ட விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.
இதன்படி, ஐந்தில் நான்கு பேர் காற்றின் தரத்தில் அவற்றின் தாக்கத்தை குறைக்க சில நடவடிக்கை எடுப்பார்கள் என கூறப்படுகின்றது.
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை எளிதாக்குவதால், சமீபத்திய வாரங்களில் காற்றின் தரத்தில் இருந்த வியத்தகு முன்னேற்றங்கள் விரைவாக மாற்றப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்த பின்னர் இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாகன சாரதிகளில் கால்பகுதியினர் நடைப்பயிற்சி மற்றும் குறைவாக வாகனம் ஓட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
மற்றொரு கால்பகுதியினர் குறைவாகப் விமானப் பயணம் மேற்கொள்வதாக கூறியுள்ளனர். அதே நேரத்தில் ஐந்தில் ஒருவர் அதிக சைக்கிள் ஓட்ட தீர்மானித்துள்ளனர்.
இதுகுறித்து Automobile Association தலைவர் எட்மண்ட் கிங் கூறுகையில், ‘முடக்கநிலையின் போது தூய்மையான காற்றின் நன்மைகளை நாங்கள் அனைவரும் அனுபவித்துள்ளோம். பெரும்பாலான வாகன சாரதிகள் தூய்மையான காற்றைப் பராமரிக்க தங்கள் முயற்சியைச் செய்ய விரும்புகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதிக நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல், குறைவான வாகனம் ஓட்டுதல் மற்றும் வீட்டிலிருந்து அதிக வேலை செய்வது ஆகியவை நெரிசலைக் குறைப்பதில் மற்றும் தூய்மையான காற்றைப் பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்’ என கூறினார்.
கருத்துக்களேதுமில்லை