ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இரா.சம்பந்தன்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள், பொது மக்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு சென்ற ரா. சம்பந்தன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.