இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலவரப்படி நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரித்துள்ளதாக அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் மாத்திரம் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் 25 பேரும் கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 26 பேர், குவைத்திலிருந்து நாடு திரும்பிய 8 பேர், மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய 3 பேரே இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 781 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 829 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்றுப் வருகின்றனர் என்பதோடு, 55 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.