ஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி
ஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் ஹோட்டல்களில் மூன்றில் ஒரு பங்குடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குள் 1.5 மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுற்றுலாவை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து சுகாதார அதிகாரிகள் அமைச்சிற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி மேலும் தெரிவித்தார்.
அந்தவகையில் ஹோட்டல் ஊழியர்கள், பயண நிறுவனங்கள், சுற்றுலா முகவர் மற்றும் சுற்றுலாவைச் சார்ந்த மற்றவர்கள் இந்த கொடுப்பனவைப் பெறுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை