மட்டக்களப்பில் நாட்டுப்பற்றாளர் நடேசனின் 16,ம் ஆண்டு நினைவு வணக்கம்!

நாட்டுப்பற்றாளர் மட்டக்களப்பு ஐயாத்துரை நடேசன் அவர்களின் 16, ம் ஆண்டு நினைவு வணக்கம் இன்று 31!05/2020, மட்டக்களப்பு ஊடக அமையத்தில் அதன் தலைவர் வ.கிருஷ்ண்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவரும , சிரேஷ்ட ஊடகவியலாஏருமான பா.அரியநேத்திரன் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு தீபங்களை ஏற்றி மலர் அஞ்சலிவணக்கம் செலுத்தினர்.

இன்று 31/05/2020, கொரோனா வைரஷ் காரணமாக ஊரடங்கு சட்டம் இடம்பெற்றபோதும் நாட்டுப்பற்றாளர் நடேசன் அவர்களின் நினைவு அதேநாளில் நினைவு கூரப்படவேண்டும் என்றரீதியில் அனுஷ்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.