கிளிநொச்சியில் நவீன பொது வசதிகள் மையம் திறந்து வைப்பு

கிளிநொச்சி நகரிற்கு, 12.2 மில்லியன் ரூபாய் செலவில் நவீன பொது வசதிகள் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

உலக வங்கியின் நிதி உதவியுடன் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறித்த பொது வசதிகள் மையம், நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல், வீடமைப்பு வசதிகள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டு இன்று கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி சேவைச்சந்தையின் ஒரு பகுதியில் கனகபுரம் வீதியில் குறித்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொது சேவையை பெற்றுக்கொள்ளும் வகையில் நவீன முறையில் குறித்த பொது வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பொது மலசலகூடம், பாலூட்டும் அறை, குளியளறை உள்ளடங்கலாக குறித்த பொது வசதிகள் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் நீர்வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் திட்டப்பணிப்பாளர் எனட யு கெ ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.