பொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை 3 மணிக்கு..!
பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பான தீர்ப்பு நாளை மாலை 3 மணிக்கு உயர் நீதிமன்றால் வழங்கப்படவுள்ளது.
மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் மற்றும் இடைபுகு மனுதாரர்களின் சமர்ப்பணங்கள் இன்று (திங்கட்கிழமை) நிறைவடைந்த நிலையில் தீர்ப்பிற்காக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த திகதி குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்குட்படுத்தும் அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றால் இன்று 10ஆவது நாளாக, பிரதம நீதியரசர் தலைமையிலான 5 நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை