இந்திய எல்லைப்பகுதிகளை இணைத்து புதிய வரைப்படத்தை உருவாக்கியது நேபாள அரசு!

இந்தியா,  நேபாளம் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்துவரும் நிலையில் இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் கோரும் சட்ட மூலத்தை நேபாள அரசு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இதன்படி  இந்திய – நேபாள எல்லையில் அமைந்துள்ள காலாபாணி, லிபுலேக்,  லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இந்தப் பகுதிகள்  உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்தியா கூறிவருகிறது. அதேபோல்  நேபாளத்தின் தாா்சுலா மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று அந்நாட்டு அரசும் கூறி வருகிறது.

இதனிடையே  உத்தரகண்ட் மாநிலத்தில் லிபுலேக் கணவாயுடன் தாா்சுலாவை இணைக்கும் சாலைத் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த 8-ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார். இதற்கு நேபாள அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து குறித்த பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய வரைபடத்தை வெளியிட நேபாள அரச தீர்மானித்துள்ளது. புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவளிக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய எதிா்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சி குறித்த சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சிவமய தும்பஹங்பே நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.