அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து கபே அமைப்பு கவலை
ஜனநாயகம் குறித்து குரல் எழுப்பும் பல அரசியல்வாதிகள், பெண்களின் பிரநிதித்துவம் தொடர்பில் அமைதி காக்கின்றமை மிகவும் கவலையளிப்பதாக கபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சுரங்கி ஆரியவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “அரசியலில் பெண்களுக்கு இருக்கும் சந்தர்ப்பம் குறித்து பேசுவது மிகவும் சிறந்தது.
நாட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் பெண்களின் வீதமே அதிகமாக காணப்படுகின்றது. எனினும் பெண்களின் பிரதிநித்துவத்திற்கு குறைந்த இடமே காணப்படுகின்றது.
மேலும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும்போது எந்தவித அரசியற் கட்சிகளும் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுக்காமை தொடர்பில் மிகவும் கவலையாக உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை