மாணவியை ஏமாற்றி வல்லுறவிற்கு உட்படுத்திய பேருந்து சாரதிக்கு கடூழிய சிறைத்தண்டனை
பேருந்தில் பயணம் செய்த பாடசாலையை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய பேருந்து நடத்துனருக்கு 30 ஆண்டு, கடூழிய சிறைத்தண்டனையை அனுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.
மேலும் மாணவிக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும் தவறினால் மேலும் 48 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஹொரவப்பொத்தானையிலிருந்து அநுராதபுரத்திற்கு சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்த திருமணமான சாரதிக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த 15 வயது பாடசாலை மாணவியை திருமணம் செய்வதாக ஏமாற்றி, பேருந்து மற்றும் லொட்ஜ்களில் அவரை பலமுறை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அனுராதபுர போதனா வைத்தியசாலையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி எச்.ஏ.கருணாதிலக, உயர்நீதிமன்றத்தில் அளித்த மருத்துவ அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர், சிறுமியை தீவிரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் ஆரம்ப விசாரணை கஹடகஸ்டிகிலிய சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர், கடந்த ஏப்ரல் 24, 2017 அன்று சட்டமா அதிபர்,அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நடத்துனருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த சந்தேகநபருக்கு 30 ஆண்டு, கடூழிய சிறைத்தண்டனையை அனுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை