ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு – உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக இரகசியத் தகவல் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் உரும்பிராய் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து 60 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.