சரியான நேரத்தில் அரசாங்கம் தேர்தல்களை நடத்த வேண்டும் – லால் விஜேநாயக்க
எதிர்பார்த்த காலத்தில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் நடத்தப்படாவிட்டால், பொதுமக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்குவார்கள் என பிரபல சட்டத்தரணியும் இடதுசாரி அரசியல்வாதியுமான லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாதபோது, பொதுமக்களின் உண்மையான ஆணைப்படி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததா என்ற கேள்வி எழும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தேர்தலின் போது மக்களின் ஆணை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் நாடு நிலையற்றதாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் எதிர்காலத்திற்காக ஒரு தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதிகாரத்திற்கு வரும் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பது மக்களின் கட்டளையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்
கருத்துக்களேதுமில்லை