வவுனியாவில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு

வவுனியா -கனகராயன்குளம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டகளப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு பிறிதொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை 5:30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் அரசடி வீதி நல்லூரைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜெயமூர்த்தி திசிகாந்தன், பளை வீதியைச் சேர்ந்த நிசான் யனுஸ்டன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.