டெல்லி துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் மீண்டும் தீ விபத்து – 120 குடிசைகள் சாம்பல்

டெல்லி துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 குடிசைகள் கருகி சாம்பலாகின.

தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. 1.30 மணியளவில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு குடிசையில் பரவிய தீ ஏனைய குடிசைகளுக்கும் பரவியது.

இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இதனையடுத்து, இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 22 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி 2 மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 120 குடிசைகள் முற்றிலும் கருகி சாம்பலாகின. தீ விபத்து உடனடியாக கண்டறியப்பட்டு அனைவரும் குடிசைகளைவிட்டு வெளியேறியதால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இப்பகுதியில் நடந்த இரண்டாவது தீ விபத்து இதுவாகும். கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் 250 குடிசைகள் எரிந்து சாம்பலாகின என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.