ஒருநாள் இறப்பில் மீண்டும் 300களைக் கடந்தது UK – தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் ஐரோப்பா.

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +359    இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள், 39,728 ஆக உயர்ந்து 40ஆயிரத்தை நெருங்குகிறது. புதிதாக இனம் காணப்பட்ட தொற்றாளர்கள்  +1,871 பேருடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 279,856   ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை,  ஜேர்மனில் +3 இறப்புகளும்,  நெதர்லந்தில் +10 இறப்புகளும், பெல்ஜியத்தில் +17 இறப்புகளும், இத்தாலியில் +71 இறப்புகளும்    சுவீடனில் +74 இறப்புகளும்,     ரஷ்யாவில் +178 இறப்புகளும், மறுபுறம் கனடாவில் +100 இறப்புகளும் பிறேசிலில் +31 இறப்பகளும் மெக்ஸிக்கோவில் +470 இறப்புகளும், இந்தியாவில் +258 இறப்புகளும், ஈரானில் +70 இறப்புகளும், பாகிஸ்தானில் +67 இறப்புகளும், இந்தோனேசியாவில் +35 இறப்புகளும்  பங்காளதேசில் +37 இறப்புகளும், பதிவாகி உள்ளன.

பிரிட்டன் நேரம் 17.24 மணி அளவில் வெளியான தகவலின்படி, அமெரிக்காவின் மொத்த இறப்புகள் 1லட்சத்து 8 ஆயிரத்தைக்  கடந்து 108,291 ஆக உயர்ந்துள்ளன. தொற்றாளர்களின் எண்ணிக்கை  1,887,708   உயர்ந்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.