கொழும்பில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்றும் நாளை மற்றும் 06, 07ஆம் தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து சுற்றாடல் பகுதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் இந்த இடங்களை பரிசோதனை செய்யும் பணியில் பொது மக்கள் சுகாதார அதிகாரியொருவருடன் பொலிஸார் ஒருவரும் கழிவு முகாமைத்துவத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் இடம்பெறுவர்.
இதற்கமைவாக நகரத்தில் அனைத்து வடிகான் கட்டமைப்பு, இயற்கை கழிவுப்பகுதி மற்றும் சாக்கடைப் புழை (Manhole) ஆகியன பரிசோதனை செய்யப்பட்டு சுத்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட சுற்றாடல் பகுதிகள் பரிசோதனை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்கள் அடையாளங் காணப்பட்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்ட்டுள்ளது.
கொழும்பு நகரம் டெங்கு நுளம்பு அற்ற வலயமாக முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை