உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு இன்று லண்டனில் நடைபெறுகிறது!

உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு இணைய காணொளி காட்சி வழியாக இன்று (வியாழக்கிழமை) லண்டனில் நடைபெறுகின்றது.

இந்த மாநாட்டில் 50இற்க்கும் மேற்பட்ட நாடுகளும், தனியார் துறை நிறுவனங்களும், சிவில் சமூகத்தின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

இதன்மூலம் தடுப்பூசி கூட்டணி அமைப்பிற்காக குறைந்த பட்சம் 7.4 பில்லியன் டொலர்கள் நிதி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது வளரும் நாடுகளுக்கு தடுப்பூசிகளைப் பெற உதவுகிறது.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மனித குலத்தை ஒன்றிணைக்க உலகம் ஒன்று சேரும்போது, இந்த மாநாடு ஒரு முக்கிய தருணமாக அமையும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.