பேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பயணிகள் எதிர்காலத்தில் பேருந்து மற்றும் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும் என்று வேல்ஸின் பொருளாதார அமைச்சர் கென் ஸ்கேட்ஸ் (Ken Skates) எச்சரித்துள்ளார்.
வேல்ஸில் பயணிகள் நிறைந்த ரயில்களையும் பேருந்துகளையும் வேல்ஸ் அரசு விரும்பவில்லை என்பதால், பயணிகளின் பாதுகாப்பிற்காக பேருந்து மற்றும் ரயில் சேவைகளில் இடம் வெகுவாக குறைக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வேல்ஸ் ரயில் ஒட்டுனர்களால், பயணிகள் முற்றிலும் அவசியம் என்று கருதினால் மட்டுமே சேவைகளைப் பயன்படுத்துமாறு எச்சரிக்கப்படுவதால், இந்த நடைமுறை எதிர்காலத்தில் கொண்டுவரப்படுமென கூறப்படுகின்றது.
அத்துடன், முக்கிய தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, பொது போக்குவரத்தில் இடங்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும் பரிசீலிப்பதாக வேல்ஸ் அரசு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 10 வாரங்களில் ரயில் பயணங்கள் 95 சதவீதம் குறைந்துவிட்டதாக வேல்ஸிற்கான போக்குவரத்து தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை