மாத்தறையை படையெடுக்க ஆரம்பித்துள்ள வெட்டுக்கிளிகள்: அச்சத்தில் விவசாயிகள்

மாத்தறை – கிரிந்த எனும் இடத்தில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

குறித்த பகுதியில் சோளப்பயிர்ச்செய்கை மற்றும் வாழைச்செய்கையே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்  குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வெட்டுக்கிளிகளினால் ஏனைய பயிர்ச்செய்கையும் பாதிப்புக்கு உள்ளாகுமென அப்பகுதியிலுள்ள விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனவே இவ்விடயத்தில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குருணாகல், மாவத்தகம, கம்பஹா, மீரிகம, அம்பாந்தோட்டை ,கேகாலை, மாத்தறை ஆகிய இடங்களிலும் வெட்டுக்கிளிகளின் ஊடுருவல் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.