யாழ் மாநகரில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் நகர வீதியில் துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்குக் கொண்டு மற்றொரு துவிச்சக்கர வண்டியை இழுத்துச் சென்ற இளைஞன் ஒருவர் மீது சந்தேகம் கொண்ட யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த சிவில் பொலிஸார், அவரை விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன்போது சந்தேக நபர், கொட்டடிப் பகுதியில் உள்ள இடமொன்றை அடையாளம் காட்டியுள்ளார். அங்கு மேலும் 9 துவிச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. அத்துடன், மேலும் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர்கள் இருவரும் அரியாலை, சுண்டுக்குளி, குருநகர் உள்பட யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் துவிச்சக்கர வண்டிகளை அடையாளம் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவார்கள்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.