பிரேத பரிசோதனைக்கு உள்ளாகும் சடலங்கள் வீடுகளில் வைக்கும் நேரத்தைவிட மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் இருக்கும் நேரமே அதிகம். மன்னார் பிரஜைகள் குழு
(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)
மன்னார் பகுதியில் திடீர் மரணங்களுக்கு உள்ளாகும் சடலங்களை வீடுகளில்
வைத்து மரியாதை செலுத்துவதைவிட மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில்
வைத்து கவலை போக்கும் செயல்பாடே அதிகமாக காணப்படுவதாக மன்னார் பிரஜைகள் குழு மன்னார் பொது வைத்தியசாலை அத்தியட்சகர் க.செந்தூர்பதிராஐhவை
சந்தித்து கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவி வரும் குறைபாடுகள் சம்பந்தமாக
பொது மக்கள் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவிடம் முறையீடுகள்
செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு பணிப்பாளர் சபை அதன்
தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் புதன் கிழமை
(03.06.2020) மன்னார் பொது வைத்தியசாலை அத்தியட்சகர் க.செந்தூர்பதிராஐhவை
வைத்தியசாலையிலுள்ள அவரின் பணி மணையில் சந்தித்து மன்னார் மாவட்ட பொது
வைத்தியசாலையில் நிலவி வரும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் பற்றி
கலந்துரையாடினர்.
இவ் கலந்துரையாடலின்போது மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் திடீர் மரணங்கள்
யாவும் பிரேத பரிசோதனைக்காக இவ் வைத்தியசாலைக்கே கொண்டு வரப்படுகின்றன.
ஆனால் கொண்டுவரப்படுகின்ற சடலங்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக பல மணி
நேரம் இவ் வைத்தியசாலையில் பிரதேச அறையில் வைத்திருப்பதால் கவலையில்
தோய்ந்திருக்கும் மக்கள் பல அசௌரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அதாவது சடலங்களின் இறுதி கிரிகைகளுக்காக வீடுகளில் வைத்திருக்கும்
நேரத்தை விட வைத்தியசாலை பிரேத அறையில் சடலங்கள் இருக்கும் நேரமே
அதிகமாக காணப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு காரணம் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வெட்டும் ஊழியர்
பற்றாக்குறையே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது என இங்கு
சுட்டிக்காட்டப்பட்டது.
இது விடயமாக தான் கவனம் செலுத்துவதாக மன்னார் பொது வைத்தியசாலை
அத்தியட்சகர் வைத்திய கலாநிதி க.செந்தூர்பதிராஐh பிரஜைகள் குழுவினரிடம்
உறுதியளித்தார்.
கருத்துக்களேதுமில்லை