எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளையும் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனியார் பேருந்துகளின் சேவைகளையும் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில், இதுவரை பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படாதிருந்த பேருந்துகளையும் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் மற்றும் ரயில்களில் காணப்படும் ஆசனங்களின் அளவிற்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை