நாளை தபாலகங்கள் திறக்கப்படாது என அறிவிப்பு!
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபாலகங்களும் நாளை(சனிக்கிழமை) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளை நாட்டிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவிர்க்கமுடியாத காரணங்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை