கொரோனா தடுப்பு பணிகளுக்காக 15 மில்லியன் டொலரை வழங்குகிறது இந்தியா!
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து தயாரிக்கும் உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு 15 மில்லியன் டொலர் தொகையை நன்கொடையாக வழங்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஒருங்கிணைத்த உலகளாவிய மருத்துவ மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், ஐநா.குழுக்கள் உள்ளிட்டோர் இணைய வழியாக பங்கேற்றனர். இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், உயிர்காக்கும் மருந்துகள், கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கு தடுப்பூசிகள் போன்றவை தயாரிக்க இந்த அமைப்பு தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் யாவும் ஒரே பொது எதிரியுடன் தற்போது போராடி வருவதாக தெரிவித்த மோடி இந்தியாவில் கர்ப்பிணிகள்இ, குழந்தைகளுக்கு நோய்கள் பரவாமல் இருக்க தமது அரசு இந்திர தனுஷ் என்ற தடுப்பூசிகளைப் போடும் திட்டத்தை அமுல்படுத்தி வருவது குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை