உத்தரப்பிரதேச விபத்தில் ஒன்பது பேர் உயிரிழப்பு!
உத்தர பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் நவாப்கஞ்ச் அருகே லொறியொன்றுடன், காரொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது கார் முற்றிலும் சேதமடைந்துள்ளதுடன், காரினுள் இருந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை