நாளை முதல் ஊரடங்குச் சட்டம் இரவு 11 முதல் அதிகாலை 4 வரை….
நாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 04 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கான அனுமதியில் மாற்றங்கள் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச, தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை நடத்திச்செல்லும் போதும், அன்றாட இயல்பு வாழ்க்கையின்போதும் கொரோனா ஒழிப்பு சுகாதார பரிந்துரைகளை முழுமையாகப் பின்பற்றுமாறு அரசு அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை