பொதுஜன பெரமுனவினரே என்மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்- ரட்னஜீவன் ஹுல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சார்பான தரப்பினராலேயே, தனக்கு எதிரான பொய்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் தொடர்பாக தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவரது செயற்பாடுகள் ஒருதரப்பை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல், தன்மீதான விமர்சனங்கள் அனைத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சார்பான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களால் வெளியிடப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், இவ்வாறாவர்களை இனங்கண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் இவர்களை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை