எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிடுமாறு ஸ்டாலின் வலியுறுத்து!
‘சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனே கைவிட வேண்டும்’ என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டில் தீர்ப்பு வருவதற்கு முன் சேலம் எட்டு வழிச்சாலை பணிகள் நடைபெறும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் கூறியிருப்பது அகங்காரத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.
விவசாயி என்ற புதிய அவதாரம் எடுத்திருக்கும் முதல்வர் இ.பி.எஸ். இலவச மின்சாரத்தை இரத்து செய்யும் பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அவசரப்படுகிறார்.
தான் போட்ட விவசாயி வேடத்தை மேல்முறையீடு வாயிலாக கலைத்து விட்டு மக்கள் விரோத திட்டத்தை நிறைவேற்ற இ.பி.எஸ். அவசரப்படுகிறார்.
விவசாயிகளின் முதுகெலும்பை முறித்து சேலம் எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதை மத்திய, மாநில அரசுகள் உடனே கைவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை