தேர்தல் ஒத்திகைக்கு தேவையான எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்பது அவசியம் – ரட்ணஜீவன் ஹூல்

நாடாளுமன்றத் தேர்தலின் ஒத்திகைக்கு தேவையான எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்பது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருக்கும் இந்த ஒத்திகை ஒரு அர்த்தமுள்ள பயிற்சியாக இருக்க குறைந்தது 1,000 பேர்வரை பங்கேற்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதேவேளை குறித்த ஒத்திகை குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, எவ்வளவு நேரம் தேவைப்படும், எத்தனை அதிகாரிகள் தேவை என்பதை இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த ஒத்திகை தீர்மானிக்கும் என கூறியுள்ளார்.

தேர்தல் நாளில் சுகாதார வழிகாட்டுதல்கள் எவ்வாறு செயற்படுத்தக்கூடும் என்பதைப் பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் இது இருக்கும் என்றும் இந்த செயன்முறையை எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.