இந்தியாவைப் போன்ற நீண்டகால கொள்கையொன்றை இலங்கைக்கும் வகுக்க வேண்டும்- சமல்

இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு, நீண்ட காலத்திற்குரிய ஒரு ஸ்தீரமான கொள்கையொன்றை இலங்கை வகுக்க வேண்டும் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தங்கலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். சமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “எந்தவொரு நாட்டிலும் நீண்ட காலத்திற்கான ஒரு கொள்கைத் திட்டமொன்று காணப்படும்.

இந்தியாவில் 20 வருடத்திற்கான ஸ்தீரமானக் கொள்கையொன்று வகுக்கப்பட்டுள்ளது. அங்கு எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அந்த பொதுக் கொள்கையொன்றின் கீழ் தான் அந்நாடு பயணிக்கும்.

தற்போது 30 வருட கால எல்லையைக் கொண்ட ஒரு கொள்கையை அவர்கள் வகுக்கிறார்கள்.  ஆனால் எமது நாட்டில் இந்த நிலைமை இல்லை. தற்போது புதிதாக ஒரு அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது.

இதனால், கடந்த கால செயற்பாடுகள் மாற்றப்பட்டுள்ளன. இதற்குப் பின்னர் ஒரு புதிய அரசாங்கம் வந்தாலும் இதேநிலைமைதான் காணப்படும்.

எமக்கும் இந்தியாவைப் போன்ற நீண்ட கால கொள்கையொன்றை வகுக்க வேண்டும். இதன் ஊடாகத் தான் கீழ்தட்டு வரை அபிவிருத்திகளை விரிவாக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.