மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்படுவது வரவேற்கத்தக்கது: மதத் தலைவர்கள்
எதிர்வரும் ஜூன் 15ஆம் முதல் இங்கிலாந்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் தனிப்பட்ட பிரார்த்தனைக்கு மீண்டும் திறக்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பை கிறிஸ்தவ தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
ஆனால் முஸ்லீம் மற்றும் யூத தலைவர்கள் தங்கள் நம்பிக்கையை கடைபிடிக்க இந்த நடவடிக்கை பொருத்தமானதல்ல என்று கூறினர்.
வெஸ்ட்மின்ஸ்டரின் பேராயரும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள மிக மூத்த கத்தோலிக்கருமான கார்டினல் வின்சென்ட் நிக்கோல்ஸ், ஒரு கட்டமாக மீண்டும் திறக்க வலியுறுத்தினார். அரசாங்கத்தின் அறிவிப்பு ஒரு பெரிய ஆசீர்வாதம் என்று கூறினார்.
வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்காக அதன் மதகுருமார்கள் சிலரின் அழுத்தத்திற்கு உள்ளான சர்ச் ஒஃப் இங்கிலாந்து, இந்த நடவடிக்கையை வரவேற்றது.
‘தேவாலய ஆலோசனைகள் அரசாங்க ஆலோசனையின் படி பாதுகாப்பாக திறக்கப்படுவதற்கான பயணத்தின் தொடக்கமாகும்’ என்று லண்டன் பிஷப் சாரா முல்லல்லி கூறினார்.
இங்கிலாந்தில் உள்ள தேவாலயங்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்கள் எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் தனியார் பிரார்த்தனைக்காக திறக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
உடல் ரீதியான தொலைதூர விதிகளை கடைபிடிக்கும் கட்டாயத்துடன், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் வழிபாட்டுக் குழுக்கள், திருமணங்கள் மற்றும் பிற சேவைகள் இன்னும் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அரசாங்கத்தின் வரைபடத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் வருகின்றன. மேலும் குறைந்தது ஜூலை 4ஆம் திகதி வரை தேவாலயங்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்கள் முழுமையாக திறக்கப்படுவதில்லை.
சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும் வழிபாட்டுத் தலங்களை பார்வையிட முடியாததால் வழிபாட்டாளர்கள் ‘ஏமாற்றத்தையும் வேதனையையும்’ உணர்ந்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதக் கட்டடங்களை கட்டம் கட்டமாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் திறக்க உதவும் திட்டத்தை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 24ஆம் திகதி மூடப்பட்ட வழிபாட்டுத் தலங்களை கட்டம் கட்டமாக திறக்கும் முதல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை கிறிஸ்தவ தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை