அமெரிக்காவில் கொவிட்-10 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது.
இதன்படி, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 449பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றால் 18,905பேர் பாதிக்கப்பட்டதோடு, 373பேர் உயிரிழந்தனர்.
இதன்மூலம் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு அமெரிக்காவில் தினசரி உயிரிழப்பின் எண்ணிக்கை குறைவாக பதிவாகியுள்ளது. இதற்கமைய, கடந்த மார்ச் 26ஆம் திகதி 355பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 469பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 1,133,272பேர் வைரஸ் தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 761,708பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16,923பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை