47 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – பழனிசாமி உறுதி!

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர் மட்டக்குழு அமைத்து, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 47 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், மக்கள் தேவையில்லாம் வெளியில் நடமாட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் சதவீதம் அதிகம் என்றும், உயிரிழப்புகளின் விகிதமும் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகத்திலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைவாக காணப்படுவதாகவும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும், சுகாதாரப்பணியாளர்கள் என முன்களப்பணியில் ஈடுபட்டு அளப்பரிய சேவை ஆற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.