சுற்றுலாத் தலங்களை திறக்க அனுமதி!
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் மூடப்பட்டன.
இதன்படி தமிழகத்தில் தஞ்சாவூர் பெரிய கோவில், அரண்மனை, அருங்காட்சியகம் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை திறப்பதற்கு இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுற்றுலா தலங்களை திறக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தொல்பொருள் ஆராய்ச்சிகள், தேசத்தின் கலாசாரத்தை பாராமரிக்கும் சின்னங்கள் திறப்பு உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை