சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத பேருந்துகளுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கி பேருந்து போக்குவரத்தை முன்னெடுப்பது கட்டாயமானது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை சுற்றிவளைப்பதற்கு நாடளாவிய ரீதியில் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
பயணிகள் போக்குவரத்திற்கு தேவையான பேருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில், காத்திருப்புப் பட்டியலில் உள்ள பேருந்துகளையும் போக்குவரத்தில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. காத்திருப்புப் பட்டியலில் காணப்பட்ட 3,500 பேருந்துகள் தற்போது இதற்காக பதிவு செய்துள்ளன.
இவற்றிற்கான போக்குவரத்து அனுமதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை