நீர்கொழும்பு சிறைச்சாலையில் திடீர் சுற்றிவளைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே 61 கையடக்கத் தொலைபேசிகள்இ 51 சிம் அட்டைகள்இ 30 மின்கலங்கள் மற்றும் 16 கிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை