தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமான அமைப்பாக கருதமுடியாது – விமல் வீரவன்ச
தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமான அமைப்பாக கருதமுடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர், பக்கச்சார்பான தேர்தல் ஆணைக்குழு பதவி விலகவேண்டும் எனவும் கோரியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமான அமைப்பாக கருதமுடியாது என தெரிவித்துள்ள அவர், குறிப்பாக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் நடந்துகொள்ளும் விதத்தினை வைத்து பார்க்கும்போது தேர்தல் ஆணைக்குழு சுதந்திரமானது என கருதமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த தேசப்பிரியவின் நடவடிக்கைகளும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் மீது மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியாமல் போனமையும் அவர் போதனை செய்வதற்கு எதிர்மாறான விடயங்கள் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த தேசப்பிரிய தேர்தலை எப்படியாவது தாமதிக்கவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் எனவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை