கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது – மஹிந்தானந்த அளுத்கமகே

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது என்பதாலேயே பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆதவன் செய்திச் சேவைக்கு தொலைப்பேசி ஊடாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் கொரோனா குறித்த அச்சம் நிலவும் நிலையில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.