வவுனியா- மடுகந்தையில் பட்டா ரக வாகனம் விபத்து: ஒருவர் படுகாயம்…
வவுனியா, மடுகந்தையில் பட்டா ரக வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் சென்ற பட்டா ரக வாகனம் ஹொரவப்பொத்தானை வீதி, மடுகந்தை பாடசாலை முன்பாக பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் அவ் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பில் மடுகந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை