மத நடவடிக்கை, பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கும் அனுமதி
வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் 50 பேருக்கு உட்பட்ட வகையில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 100 மாணவர்களுக்கு உட்பட்ட வகையில் மேலதிக வகுப்புக்களை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை