புதையல் தோண்டிய வைத்தியரின் மனைவி உட்பட மூவர் கைது
வவுனியா நத்திமித்திரகமவில் உள்ள கிப்புல்கல மலையில் புதையல் தோண்டிகொண்டிருந்த வைத்தியர் ஒருவரது மனைவி உள்ளிட்ட மூவர் பொஹஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிப்புல்கல மலைப்பகுதியில் சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு புதையல் தோண்டுவதாக பொஹவெஸ்வாவே பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரை கைது செய்துள்ளதுடன் பூஜைப்பொருட்கள், பித்தளை மோதிரங்கள், புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தும் உபகரணங்கள் என்பவற்றினையும் கைப்பற்றியுள்ளனர்.
புதையல் தோண்டப்பட்ட நந்திமித்ரகமவிலுள்ள கிம்புல்கல மலைப்பகுதியானது மிகவும் பழமை வாய்ந்த புராதன பழமை வாய்ந்த இடிபாடுகளைக்கொண்ட தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியாகும்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களையும், உபகரணங்களையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை