சுகாதார பிரிவின் விதிமுறைகளுக்கு அமையவே தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற வேண்டும் – பொலிஸ்

சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கமையவே பொதுத் தேர்தல் பிரசார கூட்டங்களை முன்னெடுக்க அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிதிகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பாக சுகாதாரப் பிரிவு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த விதிமுறைகள் குறித்து பொலிஸ் தலைமையகத்திற்கும் சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பாக பொலிஸார் அவதானமாக உள்ளனர்.

எனவே, சுகாதார பிரிவினரின் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸார் தயாராக இருக்கின்றனர்” என மெலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.