CIDயின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை கொலை செய்ய தீவிரவாதிகள் முயற்சி? – விசாரணை ஆரம்பம்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை கொலை செய்வதற்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
குறித்த விசாரணைகளை எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2019ஆம் ஆண்டு வனாத்தவில்லுவில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, தீவிரவாதிகள் இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளமை தொடர்பாக தெரியவந்துள்ளது என ஜனாக மாரசிங்க ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
மேலும் 2019 ஜனவரி 16 ம் திகதி கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வனாத்தவில்லு பகுதிக்கு சென்றதாக தெரிவித்துள்ள அவர், தங்களிற்கு தகவல் வழங்கிய முகமட் தஸ்லீன் என்பவரும் தங்களுடன் வந்தார் என்றும் பின்னர், தஸ்லீன் தீவிரவாதிகளால் சுடப்பட்ட போதிலும் உயிர்தப்பினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை